தீராத இடியாப்ப சிக்கல்.. தயாரிப்பாளரின் கோடிக் கடனை சரிகட்ட முடியாத சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் 100 கோடி வசூல் செய்யும் நடிகராகவும் திகழ்ந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் படங்கள் இவர் நடிப்பில் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை கொடுத்திருந்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கைவசம் ஏராளமான படங்களில் நடித்தும் வருகிறார்.
நடுத்தெருவில் தயாரிப்பாளர்
இப்படியொரு பிஸி நேரத்தில் கூட சிவகார்த்திகேயனை ஒரு பிரச்சனை துறத்திக்கொண்டே வருகிறது. சில வருடங்களுக்கு முன் சீமராஜா படத்தில் நடித்து அப்படம் கோடிக்கணக்கில் நஷ்டத்தை கொடுத்தது. சிவகார்த்திகேயனின் ரெமோ, வேலைக்காரன், சீமராஜா போன்ற படங்களை தயாரித்திருந்தார் 24AM Studios நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா .
இப்படங்களில் ஏற்பட்ட நஷ்டத்தால் பல கோடியில் கடனில் ஆளே காணாமல் போனார். அதற்கு பதிலாக சிவகார்த்திகேயன் அயலான் என்ற படத்தினை எடுத்து சர்செய்துவிடலாம் என்றும் வரும் படங்களில் சம்பளத்தை உயர்த்தி அந்த கடனை பூர்த்தி செய்யலாம் என்று திட்டமிட்டார்.
சிக்கித்தவிக்கும் சிவகார்த்திகேயன்
ஆனால் அயலான் படம் தற்போது கிடப்பில் விடப்பட்டது. இதனால் தான் சிவகார்த்திகேயன், பிரின்ஸ், மாவீரன் போன்ற படங்களில் 30 கோடி அளவில் சம்பளமாக கேட்டுள்ளாராம். சீக்கிரமே இந்த தொல்லையில் இருந்து நிம்மதியாக இருக்கலாம் என்று சிவகார்த்திகேயன் கடினமாக உழைத்து வருகிறார்.