அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுக்கு சோதனையா? கூட்டத்தில் கேட்ட சத்ததால் கடுப்பாகி கொடுத்த ரியாக்ஷன்..
விஜய் கோட் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கியை கொடுத்ததும் அடுத்து சினிமாவில் விஜய் இடத்தில் இவர்தான் என்று ரசிகர்கள் சொல்லி வந்தனர்.
ஆனால் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்தியிடன் பராசக்தி படம் ரிலீஸாகப் போகிறது என்றதும் சிவகார்த்திகேயனை விஜய் ரசிகர்கள் கண்டபடி விமர்சித்தனர். இதன்பின் சிவகார்த்திகேயன் எது செய்தாலும் விஜய் ரசிகர்கள் அவரை விமர்சித்து வந்தனர்.

வருங்கால முதல்வரே
இந்நிலையில் மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாகத்தில் வருங்கால முதல்வரே, வருங்கால பிரதமரே, வருங்கால சூப்பர் ஸ்டாரே என்று கோஷமிட்டனர். உடனே சிவகார்த்திகேயன் கையால் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது.
வருங்கால முதலமைச்சர் என முழக்கம் - தடுத்து நிறுத்திய சிவகார்த்திகேயன் | SK Fans | Cinema | IBC Tamil#sivakarthikeyan #cinema #tamilnaducm #ibctamil pic.twitter.com/OOsxcm1CjK
— IBC Tamil (@ibctamilmedia) September 11, 2026