தனுஷை இந்த விஷயத்தில் ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்! புலம்பும் தயாரிப்பாளர்கள்..
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது கோடிகள் சம்பளம் வாங்கும் அளவிற்கு முன்னேறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் கொடுத்த வெற்றி சில படங்களால் ஓரங்கப்பட்டார். இதையடுத்து தற்போது டாக்டர் படத்தில் நடித்து இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் சினிமா பிரபலங்கள் தங்களுடைய சம்பளத்தை ஏற்றிக்கொண்டு வருவது தயாரிப்பாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில், டாக்டர் படத்தால் ஒரு பக்கம் தயாரிப்பாளர்கள் சந்தோசமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் சிவகார்த்தியன் செய்வது சரியல்ல என பல தயாரிப்பாளர்களும் கூறிவருகின்றனர். அதாவது டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். ஆனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பார்த்துவிட்டு தற்போது நடித்து வரும் டான் படத்திற்கு லைக்கா நிறுவனத்திடம் 35 கோடி சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என கூறியும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரிப்பதால் அதனால் தான் சம்பளம் இவ்வளவு கேட்கிறேன் என்று கூறியுள்ளாராம்.
தயாரிப்பாளர் வேறுவழியின்றி தருகிறேன் என சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் தற்போது சிவகார்த்திகேயன் வைத்து கலைப்புலி எஸ் தாணு, ஏஜிஎஸ் மற்றும் ஐசரி கணேஷ் போன்ற பெரிய நிறுவனங்கள் சிவகார்த்திகேயன் வைத்து படங்கள் தயாரிக்க காத்திருப்பதால் சிவகார்த்திகேயனின் சம்பளம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று கூறி வருகிறார்கள். இதனால் நடிகர் தனுஷின் சம்பளத்தொகையை விட டாக்டர் படம் வெற்றியடைந்தால் அவரை மிஞ்சிவிடுவார் சிவகார்த்திகேயன் என்று கூறி வருகிறார்கள்.