சிவகார்த்திகேயனால் புலம்பி தள்ளும் தயாரிப்பாளர்! சொத்துக்களை விற்கவேண்டிய நிலையா?

1 week ago

தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி பின் தமிழ் சினிமாவில் தற்போது கொடிக்கட்டி பறந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். 3 படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்தி.

ஆரம்பத்தில் பெரிய வெற்றிப்படங்களை கொடுத்து வந்த சிவா தற்போது தோல்விகளை சந்தித்து வருகிறார். இதற்கிடையில் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து இரு படங்களை தயாரித்து வருகிறார் பிரபல தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டுயோஸ் ஓனர் ராஜேஷ்.

இவரின் தயாரிப்பில் வெளியான படங்கள் பெரியளவில் பேசப்படவில்லை. சமீபத்தில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படமும் பெரிய நஷ்டத்தை கொடுத்தது. இதையடுத்து தற்போது அயலான் படத்தினை தயாரித்து வருகிறார் கேஜேஆர் ராஜேஷ். 70 கோடி வரை பிசினஸ் வைத்திருந்த சிவகார்த்திகேயனின் தமிழ் வியாபாரம் தற்போது 50 கோடிக்கும் கீழ் வந்துவிட்டதாம்.

இது தற்போதைய டாக்டர் படத்திலும் பெரிய பிரச்சனையாக அமைந்து வருகிறது. இதன் காரணமாக டாக்டர் படத்தையும் வெளியிட முடியாமல் தடுமாறி வருகிறார். சிவகார்த்திகேயன் அவ்வப்போது தோல்விப்படம் கொடுத்தாலும் ஒரு வெற்றிப்படம் கொடுத்தாலும் அவரது மார்க்கெட் உயர்ந்து விடும் என்பது தெரிந்த விஷயம் தான்.

ஆனால் அந்த வெற்றி படம் எப்போது என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது சிவகார்த்திகேயன் இடத்தில். இதனால் சொத்தை விற்கும் நிலையில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்