அஜித்தை ஒதுக்கிவிட்டு சிவகார்த்திகேயனை தலையில் வைத்து ஆடிய தயாரிப்பாளர்.. கோடி நஷ்டத்தில் புலம்பும் நிலை..

Sivakarthikeyan G. N. Anbu Chezhiyan Prince (2022)
By Edward Nov 14, 2022 06:25 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராகவும் உச்சத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். டான் படத்தினை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

தீபாவளி அன்று வெளியான இப்படம் கதை கூட இல்லை என்று படுமோசமான விமர்சனத்தை பெற்றது. சிவகார்த்திகேயன் படம் என்றாலே காமெடியாவது சரியாக ஒர்க்கவுட் ஆகும். ஆனால் கதையில் அதுகூட அமையாமல் போனது.

இப்படத்தினை அன்பு செழியன் தான் வெளியிட்டுள்ளார். இதற்காக இசை வெளியீட்டு விழாவில் எம்ஜிஆர், விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் என்று தூக்கி வைத்து பேசினார். எப்போது அஜித்தை தூக்கிவைத்து ஆடும் அன்பு செழியன் அஜித்தை ஒதுக்கி புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

ஆனால் பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்ததால் அப்படத்தினால் 14 கோடி வரை நஷ்டப்பட்டுள்ளார். இதுகுறித்து அன்பு செழியன் சிவகார்த்திகேயனை சந்தித்து புலம்பி இருக்கிறார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் தான் பட்ட கடனை அடைக்க அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹிட் போராடி வருகிறார். இதில் இந்த பிரச்சனை வேறயா என்று புலம்பியுள்ளார். கடனை தீர்ப்பதற்காக சிவகார்த்திகேயன் கதை கேட்காமல் நடித்து வருகிறார் என்ற விமர்சனத்தையும் கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.