சிவகார்த்திகேயனின் மதராஸி சரியான பொம்மை துப்பாக்கி!! ப்ளூ சட்டை விமர்சனம்...
மதராஸி
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், வித்யூ ஜமால், விக்ராந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகியுள்ள படம் தான் மதராஸி. அனிருத் இசையில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் மதராஸி படம் எப்படி இருக்கிறது என்று சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன்
அதில், படத்தின் தொடக்கத்தில் அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் ஆயுத கலாச்சாரத்தை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இதை எப்படி தெரிந்து கொண்டு என் ஐ ஏ அதிகாரி ஒருவர் எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.
அதை கடந்து அந்த ஆயுதங்கள் தமிழ்நாட்டிற்குள் வந்துவிடுவதை அழித்தொழிக்க வேண்டும் என்றால் ஒரு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினால் தான் முடியும் என்று அதிகாரி முடிவு செய்கிறார்.
இந்த சமயத்தில் கதாநாயகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதை பார்த்த அந்த அதிகாரி, தன் குழுவில் இருப்பவரை இழப்பதற்கு பதிலாக கதாநாயகனை தற்கொலைப்படையாக மாற்றிவிடலாம் என்று முயற்சி செய்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பது தான் கதை.
சுமாரான படமா
இப்படத்தை பார்க்கும் போதே கஜினி, துப்பாக்கி படத்தை மிக்ஸ் செய்து ஒரு படம் எடுத்ததை போல் இருந்தது. இதுபோன்ற படங்களில் வில்லன் ரோல் மிகவும் வலுவாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு துப்பாக்கி வில்லன் ரோல். துப்பாக்கி படத்தின் இடைவேளை காட்சிக்கு தியேட்டரே அதிரும்.
ஆனால் மதராஸி படத்தின் இடைவேலையில் படமே முடிந்துவிட்டது என்று தான் சொல்வார்கள். அந்தளவிற்கு திரைக்கதை இருக்கிறது. கதாநாயகன் எதற்காக தற்கொலை செய்து கொள்வாரோ, அந்த வேலையும் முடிந்துவிடும். என் ஐ ஏ அதிகாரி கதாநாயகனையும் கதாநாயகியையும் ஒரு வேலை செய்யச் சொல்வார்.
அதை மட்டும் ஒழுங்காக செய்திருந்தால் படம் அங்கேயே முடிந்திருக்கும். இரண்டாம் பாதி சரியான கதையும் திரைக்கதையும் இல்லாமல் இழுஇழுன்னு இழுத்துட்டாங்க. இதனால் சுமாரான படமாக மாறிவிட்டது. முதல் பாதியில் சில காட்சிகள் நன்றாக இருந்தது. கதநாயகன் கதநாயகி சந்திக்கும் காட்சிகள் நன்றாக இருந்தது. கதாநாயகனுக்கு கொடுத்த பிளாஸ்பேக் ஒர்க்கவுட் ஆகவில்லை.
பொம்மை துப்பாக்கி
படத்தின் எல்லா சண்டைக் காட்சிகளும் நன்றாக இருந்தது, குறிப்பாக வித்யூ ஜமாலின் சண்டைக்காட்சிகள். தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வரப்பார்க்கிறார்கள் என்று சொல்லி பயமுறுத்தி படத்தை தொடங்கிவிட்டு, இவர்கள் கொண்டு வந்த துப்பாக்கியை வைத்து சுட்டால், கதநாயகனும் சாகல, கதாநாயகியும் சாகல, வில்லனும் சாகல, எல்லாரும் அடுத்த காட்சியில் எழுந்துவிடுகிறார்கள்.
இந்த துப்பாக்கியை எதுக்கு விற்பனை செய்ய வந்தார்கள் என்று தெரியவில்லை. பொம்மை துப்பாக்கி என்று விற்க அனுமதித்து இருக்கலாம். இப்படியொரு படமும் எடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து பேசியிருக்கிறார்.