சிவகார்த்திகேயனின் மதராஸி படம்!! பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்...
மதராஸி படம்
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ருக்மணி வந்த், பிஜு மேனன், வித்யூத் ஜமால் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து செப்டம்பர் 5 இன்று ரிலீஸாகியுள்ளது மதராஸி படம். மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகள் இன்று உலகம் முழுவதும் மதராஸி படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இலங்கை மற்றும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் அதிகாலை 6 மணிக்கே படத்தின் முதல் காட்சி வெளியாகி ரசிகர்களை சிவகார்த்திகேயன் கொண்டாட வைத்துள்ளார்.
இந்நிலையில் படம் தொடங்கிய முதல் நிமிடத்தில் இருந்தே படத்தை பார்ப்பவர்கள் எக்ஸ் தள பக்கத்தில் தங்களின் விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் படத்தை பார்த்த பயில்வான் ரங்கநாதன் மதராஸி எப்படி இருக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளார்.
பயில்வான் ரங்கநாதன்
அதில், படத்தின் கதையை பொறுத்தவரை, துப்பாக்கி கடத்தும் வில்லன் வித்யூ ஜமால் மற்றும் டான்சிங் ரோஸ். விக்ராந்த், பிஜு மேனன் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள். ஆயுதங்கள் கடத்தும் கும்பலுக்கும் தேசிய பாதுகாப்பு படைக்கும் இடையே மோதல் நடக்க, ருக்மினி வசந்தின் குடும்பம் மாட்டிக்கொள்கிறது.
அவர்களை காப்பாற்ற சிவகார்த்திகேயன் முயற்சிக்கிறார். இதுதான் படத்தின் கதை. சிவகார்த்திகேயனின் சிறப்பான நடிப்பை ஏ ஆர் முருகதாஸ் வாங்கியுள்ளார். ஐ ஏ எஸ் அதிகாரிகளாக பிஜு மேனன், விக்ராந்துக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.
வித்யூத் ஜமால், டான்சிங் ரோல் இருவரும் வில்லனாக சிறப்பாக நடித்துள்ளனர். ருக்மினி வசந்த் சிறப்பாக நடிக்க விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். ரமணா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை போல் சிவகார்த்திகேயனும் வித்யூ ஜமாலும் பேசிக்கொள்வது சிறப்பாக இருந்தது.
சிவகார்த்திகேயன்
ஆக்ஷன் ஹீரோ என்று சிவகார்த்திகேயன் நிரூபித்துள்ளார். பொதுவாகவே சிவகார்த்திகேயன் படங்கள் என்றால் குழந்தைகளை மையப்படுத்தி இருக்கும், ஆனால் இப்படத்தில் அதிகமான சண்டைக்காட்சிகள் இருக்கிறது.
ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் மசாலா படமாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் ருக்மினி காதல் காட்சிகள் ஒர்க்கவுட் ஆகியுள்ளது. அனிருத் சிறப்பாக இசைமையத்துள்ளார். மற்ற படங்களை போல் இல்லாமல் படத்தில் காப்பி அடிக்காமல் பாடல்களை உருவாக்கியுள்ளார்.
பல தோல்விகளுக்கு பின் வீறுகொண்டு எழுந்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ். அரசியல் கருத்துள்ள படத்தை அவர் கொடுத்துள்ளார். பொழுதுப்போக்காக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தினை கொடுத்துள்ளது எனக்கு முழுமையாக பிடித்துள்ளது என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.