விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றுகிறாரா சிவகார்த்திகேயன்!! மோடியுடன் பராசக்தி..
இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார் சுதா கொங்கரா. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் பராசக்தி.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றன. இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

மோடி பொங்கல் விழா
இது ஒரு பக்கம் இருக்க, பொங்கல் தினத்தை முன்னிட்டு டெல்லியில், மத்திய அமைச்சர் எல் முருகன் தன்னுடைய வீட்டில் பொங்கல் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். நிகழ்ச்சிக்கு மோடி தலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பராசக்தி நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் கலந்து கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்து சிவகார்த்திகேயன் மோடியை சந்தித்து பேசியுள்ள புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இதனை வைத்து பலரும் விஜய் ரசிகர்கள் வெறுப்பேற்றுகிறார் சிவகார்த்திகேயன் என்ற கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
