கோடிக்கணக்கில் பணத்தை இழந்து சிவகார்த்திகேயன், கடனாளி ஆனார்
Sivakarthikeyan
By Jeeva
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் டாக்டர் படம் நேற்று திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மார்க்கெட் மீண்டும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் டாக்டர் படம் ரிலிஸாக சிவகார்த்திகேயன் படத்தின் மீது இருந்த கடனை தான் ஏற்றதால் தான் படம் ரிலிஸானதாம்.
அதுவும் ரூ 27 கோடி வரை சிவகார்த்திகேயன் கடன் பொறுப்பேற்று உள்ளாராம், இதனால் சிவகார்த்திகேயன் மீண்டும் கடனாளி ஆகியுள்ளார்.