ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சிவகார்த்திகேயன் பட நாயகி ஆத்மியா.. புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவை தாண்டி மற்றத்துறை சினிமாவில் இருந்து தமிழில் அறிமுகமாகி நடித்த சில படங்களில் ஆள் அடையாளம் தெரியாமல் போவதுண்டு. அப்படி மலையாளத்தில் இருந்து வந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய நடிகை தான் இப்போது அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார்.
2012ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி நல்ல வரவேற்பு பெற்ற மனம் கொத்தி பறவை படத்தில் கதாநாயகியாக நடிகை ஆத்மியா ராஜன் அறிமுகமாகி நடித்தார். இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து மலையாளத்தில் நடிக்க ஆரபித்தார்.
அதன்பின் போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் சரியான வாய்ப்பில்லாமல் இருந்த ஆத்மியா ராஜன் பல ஆண்டுகள் கழித்து காவியன் என்ற படத்தில் நடித்தார்.
பின் 2021ல் சனூப் கே நம்பியார் என்பவரை திருமணம் செய்து செட்டிலாகினார். கேரளாவில் வசித்து வரும் ஆத்மியா, மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார். தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
You May Like This Video






