தலைக்கனத்தில் எல்லா விசயத்திலும் தலையிடும் சிவகார்த்திகேயன்.. பலகோடி கடனால் தவிக்கும் நிலை!!
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்று பிரபலமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா, மனம் குத்தி பறவை போன்ற சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயன், தற்போது 30 கோடி அளவிற்கு சம்பளம் வாங்கும் நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

இதற்கெல்லாம் அவர் போட்ட பெரிய உழைப்பு தான் காரணம் என்று பல பெருமைப்படுத்தி கூறுவார்கள். அப்படி நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
பெரிய அடி
ஹீரோ, மிஸ்டர் லோக்கல், பிரின்ஸ், சீமராஜா போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை கொடுத்து சிவகார்த்திகேயனுக்கு பெரிய அடி விழுந்ததோடு மறைமுக தயாரிப்பாளராக இருந்து பல கோடி நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக கஷ்டப்பட்டார்.
அதை எப்படியாவது அடைக்க மிகப்பெரிய பிளானை போட்டு கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ் உள்ளிட்ட சில படங்களை தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து தயாரித்தார்.
ஆனால் சமீபத்தில் டான், டாக்டர் போன்ற 100 கோடி வசூல் படத்தால் கொஞ்ச கடனை அடைத்து பிரின்ஸ் படத்தின் தோல்வியால் 6 கோடியை படக்குழுவினரோடு சேர்த்து நஷ்ட ஈடு செய்தார் சிவகார்த்திகேயன்.

அயலான் - மாவீரன்
இந்நிலையில், அவர் நடிப்பில் அயலான் படம் கிடைப்பில் இருக்கும் நிலையில் அப்படத்தை பார்த்த சிலருக்கு திருப்தி இல்லையாம். அதேபோல் மாவீரன் படம் ஷூட்டிங் அவ்வப்போது நின்று போயும் வருகிறது. இதற்கு காரணம் இயக்குனர் தயாரிப்பாளர்களிடம் சிவகார்த்திகேயன் செய்யும் சில பிரச்சனைகள் தானாம்.
அதாவது, மாவீரன் படத்தின் கதைகளில் அனைத்திலும் ஈடுபடுத்தி வருகிறாராம் சிவகார்த்திகேயன். இதனால் இயக்குனருக்கு அவருக்கு மன கசப்பு ஏற்பட்டு பட ஷூட்டிங்கும் நின்று போகிறதாம்.
இதனால் கஷ்டப்படப் போவது தயாரிப்பாளர் தான் என்று யோசித்து விட்ட கால்ஷீட் நாட்களோடு சேர்த்து மாவீரன் படத்தினை முடித்து தர முடிவெடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். இரு படத்தில் ஒன்று அடிப்பட்டாலும் மிகப்பெரிய சரிவை பெறப்போவது சிவகார்த்திகேயன் தான் என்று கோலிவுட்டில் முனுமுனுத்து வருகிறார்கள்.