அவங்க பிழைப்பில் மண்ணை அள்ளி போடுகிறார் சிவகார்த்திகேயன்!! புலம்பும் பிரபலங்கள்..

Sivakarthikeyan Nelson Dilipkumar Gossip Today
By Edward Jun 13, 2023 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் தனக்கான ஒரு இடத்தினை பிடித்து கோடியில் மார்க்கெட்டை வைத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். நடிப்பை தாண்டி தயாரிப்பு மற்றும் பாடலாசிரியர், பாடகர் என்று தன் திறமையை காட்டி வருகிறார்.

பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய பாடல்களை எழுதி வெற்றியை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் குறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் முக்கிய தகவல் ஒன்றினை கூறியிருக்கிறார். அதாவது, நான் ஒரு பிரபல பாடலாசிரியரிடம் பேசியபோது, அவர் என்னிடம் ஒரு விசயத்தை ஆதங்கத்துடன் கூறினார்.

எங்களுக்கு வேறு தொழில் கிடையாது என்றும் முழுக்க முழிக்க பாடல் எழுதுவது மட்டும் தான் எங்களுடைய தொழில் என்றும் கூறினார். மேலும் நங்கள் இசையமைக்க முடியாது, நடிக்கவும் முடியாது.

நடிகர்களும் இசையமைப்பாளர்களும் பாட்டெழுத துவங்கினால் நாங்கள் எங்கே போவது என என்னிடம் கேட்டதாக அந்தணன் கூறியுள்ளார்.

அவர் கூறியது நியாயமாகவே பட்டது இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் பாடலாம், பாடல் எழுதலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டது என சிவகார்த்திகேயனை கூறியுள்ளார்.

தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நெல்சன் சிவகார்த்திகேயனை ஒரு பாடலை எழுதவும் வைப்பார் என்றும் அந்தணன் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் பரவ சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அந்தணன் கூறியதை எதிர்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.