100 செஞ்சுரி அடித்த சச்சினுக்கே கை உதறும்.. வைரலாகும் சிவகார்த்திகேயனின் பேச்சு!
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.
படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் பேச்சு!
அதில், " 100 செஞ்சுரி அடித்த சச்சினுக்கே 90 ரன் அடிக்கும் போது கை உதறும் என்று சொல்வதெல்லாம் வேடிக்கையான விமர்சனம் தான். ஏதோ ஒரு சீசனில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி சொதப்பி விட்டால், தோனியை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
ஆனால், அவர் 5 முறை சாம்பியன்ஷிப் வென்று கப் வாங்கிக் கொடுத்தவர். இவர்களுக்கே இப்படி விமர்சனங்கள் வரும்போது, நான் யார்?
நல்ல விமர்சனத்தை நிச்சயம் கேட்டு அதன்படி நடிப்பேன். ஆனால், என்னை காலி பண்ணும் விமர்சனங்களை கண்டுக்கொள்ள மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.