பிரின்ஸ்-க்கு நெகட்டிவ் விமர்சனம் போதாதுன்னு இது வேறயா? சிவகார்த்திகேயன் பட்டகஷ்டம் வீணாப்போச்சே..
தமிழ் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகர் என்ற அந்தஷ்த்தை பெற்றவர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தில் ஆரம்பித்த லோ பட்ஜெட் மார்க்கெட் தற்போது 50 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் அளவிற்கும் 100 கோடி வசூல் குவிக்கும் அளவிற்கும் உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
கலவையான விமர்சனம்
டாக்டர், டான் படத்தின் 100 கோடி வசூலை தொடர்ந்து பிரின்ஸ், மாவீரன் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படம் இன்று வெளியாகியுள்ளது. ரிலீஸான முதல் காட்சியிலேயே படும் ஓரளவிற்கு மட்டும் வரவேற்பு பெற்று வருகிறது.
தமிழ் ராக்கர்ஸ்
கலவையான விமர்சனம் என்று ஒரு பக்கம் இருக்க தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் பிரின்ஸ் படம் நல்ல பிரிண்ட்டில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் மோசமான விமர்சனம் என்று ஒரு பக்கம் இருக்கையில் அடுத்த வார இறுதியில் படத்தின் எதிர்ப்பார்ப்பும் வசூலிலும் அடிவாங்கவுள்ளது.
இப்படத்திற்காக உழைத்த எல்லாமே வீணாப்போச்சே சிவகார்த்திகேயன் என்று பலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இனிமேல் நல்ல கதையை தேர்வு செய்யுங்கள் என்றும் கூறி வருகிறார்கள்.