சொந்த வீட்டை விட்டு திடீரென வாடகை வீட்டுக்கு குடி போகும் சிவகார்த்திகேயன்.. இதுதான் விஷயமா?
Sivakarthikeyan
Tamil Cinema
Tamil Actors
By Bhavya
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் சென்னை பனையூரில் குடும்பத்துடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
இதுதான் விஷயமா?
இந்நிலையில், அவர் அங்கிருந்து சென்னை ஈசிஆரில் உள்ள தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டுக்கு குடிபெயர உள்ளாராம்.
அதற்கு முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் பனையூரில் உள்ள தனது வீட்டை இடித்துவிட்டு, அங்கு மாடர்ன் பங்களா ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளாராம்.
இதன் காரணமாக பனையூரில் இருந்து ஈசிஆருக்கு மாற உள்ளாராம். தற்போது, இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.