வெளிநாட்டு நடிகையா! டபுள் ஓகே கூறிய சிவகார்த்திகேயன்..
தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு உயர்ந்த இடத்தில் அதிலும் முன்னணி நடிகர் என்ற அந்தஷ்த்தை பெற்றவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தினை வெளியிட்டு 100 கோடி வசூலுக்கும் மேல் பெற்றார். இதையடுத்து டான் மற்றும் அயலான் படங்கள் வெளியாக காத்திருக்கிறது.
இதையடுத்து தெலுங்கு பக்கம் செல்லும் சிவகார்த்திகேயன், ஜதி நத்னலு என்ற படத்தின் இயக்குனர் அனுதீப் கேவி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வருகிறது 2022 ஜனவரி 23ஆம் தேதி பூஜை நடத்த போவதாகவும் 24ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட உள்ளூர் படப்பிடிப்பும் லண்டன் போன்ற நகரங்களிலும் ஷூட்டிங் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கதை வெளிநாட்டு சம்பந்தமான டூரிஸ்ட் கைடை மையப்படுத்தி எடுப்பதால் வெளிநாட்டு நடிகையை நடிக்க வைக்கவுள்ளதாகவும் அதற்கான கதாநாயகியின் தேடல் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.