கால் வெச்ச இடமெல்லாம் அடிமேல் அடி தான்!! சிவகார்த்திகேயனுக்கு இப்படியொரு சோதனை காலம்..
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் மற்றும் அயலான் என இரு படங்களில் அடுத்தடுத்த வெளியாகவுள்ளன. பிரின்ஸ் படத்தி தோல்விக்கு பின் இவ்விரு படம் ஆரம்பித்த நாள் முதல் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையாக வந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் போக்கி வெளியில் வந்தாலும் சிவகார்த்திகேயனை கடன் தொல்லை துறத்திக்கொண்டே வருகிறது.
அதை சமாளிக்க நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அடுத்த படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார். இதற்காக புது கெட்டப்பில் சிவகார்த்திகேயன் மாறியிருப்பதை பார்த்து பலர் ஷாக்கானார்கள்.
சமீபத்தில் காஷ்மீர் பகுதியில் படத்தில் ஷூட்டிங் சென்று கொண்டிருந்த சமயத்தில் புது ஏழரை சனியன் போல் ஒரு பிரச்சனை வந்துள்ளது. காஷ்மீர் பகுதியில் நடக்கும் ஷூட்டிங் இடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதால் ராணுவம் படக்குழுவை திரும்பி போகச்சொல்லி இருக்கிறார்கள். படக்குழுவினரும் காஷ்மீரில் இருந்து வெளியேறி 20 நாட்கள் ஆகியும் இன்னும் திரும்ப கூப்பிடாமல் இருக்கிறார்கள்.
இதனால் கமல் மற்றும் சிவகார்த்திகேயன் என்ன செய்வது என்ற அப்டெட்டில் இருந்து வருகிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயனால் இப்படத்தில் இருந்து வேறொரு படத்திற்கு தாவமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கமல் படத்திற்காக தாடி முடி என வளர்த்து வருவதால் மற்றொரு படத்தில் நடிக்க கஷ்டமாகும் என்பதாலும் கமல் இதனால் கோபப்பட நேரும் என்ற கார்ணத்தாலும் சிவகார்த்திகேயன் வேறுவழியின்றி முழித்து வருகிறாராம். இப்படி போகும் இடமெல்லாம் கன்னி வெடியாகவும் இருக்கிறது என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.