வெளியாகாமல் இத்தனை கோடிகளை அள்ளிய டாக்டர்? கோடியில் புரளும் சிவகார்த்திகேயன்!

doctor boxoffice nelson anirudh sivakarthikeyan
By Edward Oct 08, 2021 11:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஏற்கனவே இருந்த முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்து நின்று கொண்டிருப்பபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் ஆயிரம் என சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன் டாக்டர் படத்திற்காக சுமார் 35 கோடி அளவில் சம்பளமாக கேட்டுள்ளாராம். ஆரம்பத்தில் அப்படத்திறகாக 25 கோடி பேசியநிலையில் படத்தின் எதிர்ப்பார்ப்பால் பத்து கோடியை ஏற்றி 35 கோடியாக கேட்டுள்ளார்.

இந்நிலையில் இப்படம் ஆயுத பூஜையையொட்டி அக்டோபர் 9ல் வெளியாகவுள்ளது. இப்படத்தின் எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்து நாளை அக்டோபர் 9ல் திரையில் வெளியாகவிருக்கிறது. டாக்டர் மொத்த பட்ஜெட்டே 45 கோடி ரூபாய் தானாம். முதலில் டாக்டர் படத்திற்கு 52 கோடி ரூபாய் பட்ஜெட் வைத்துள்ளனர்.

ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ஹீரோ படம் தோல்வி அடைந்ததால் சுமார் 7 கோடி ரூபாய் வரை குறைத்து 45 கோடி ரூபாயாக பட்ஜெட் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டாக்டர் படம் இதுவரை சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை என மொத்தம் 62.60 கோடி ரூபாய் வரை வியாபாரமாகி உள்ளதாம்.

எப்படி பார்த்தாலும் தோராயமாக சுமார் 12 கோடி ரூபாய் வரை தயாரிப்பாளர் லாபம் பார்த்து விட்டார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது படம் வியாபாரமாகியுள்ள கணக்குபடி பார்த்தால் லாபம் தானாம். ஆனால் படத்தை விநியோகஸ்தர்களிடம் அட்வான்ஸ் வாங்கி விநியோகம் செய்துள்ளதால், படம் வெளியான பின்னரே முழுமையான லாப நஷ்ட கணக்கு தெரியவரும் என கூறப்படுகிறது.