தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட சிவகார்த்திகேயன்.. செக் வைத்து தூக்கிய தயாரிப்பாளர் சங்கம்

Sivakarthikeyan Gossip Today Maaveeran
By Edward May 31, 2023 03:00 PM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வளர்ந்தப்பின் வெள்ளித்திரையில் பெரிய இடத்தினை தொடுவது என்பது சுலபம் இல்லை. அதையெல்லாம் தன் திறமையால் முன்னேறி எட்டாத உயரத்தை தொட்டு வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது பல கோடி சம்பளம் வாங்கும் நடிகராகவும் 100 கோடி வசூல் நாயகனாகவும் திகழ்ந்து வருகிறார்.

ஆனால் இதற்கிடையில் சில தோல்வியை கொடுத்ததோடு தயாரிக்க ஆசைப்பட்டு தனக்குத்தானே ஆப்பு வைத்து பல கோடி நஷ்டத்தை சந்தித்தார். இதனால் 100 கோடிக்கும் மேல் கடன் ஏற்பட்டு கடனாளியாக மாறி, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வந்தார் சிவகார்த்திகேயன்.

தற்போது அவர் நடிக்கும் படங்கள் முதல் தயாரித்து ரிலீஸ் ஆகும் படங்கள் வரை பல பஞ்சாயத்துக்களை சந்தித்தும் வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயனை அழைத்த தயாரிப்பாளர் சங்கம், நீங்கள் சொன்னதை நிறைவேற்றவில்லை என்பதால் மாவீரன் படம் வெளியாகும் நாளுக்கு முன் 33 கோடியை கொடுத்தே ஆகவேண்டும் என்றும் இல்லை என்றால் அப்படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகாது என்று சொல்லிவிட்டார்களாம்.

இதனால் என்ன செய்வது என்று சிவகார்த்திகேயன் முழித்து வருகிறார் என்று கோடம்பாக்கத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.