தப்பை தட்டிக்கேட்ட பிரேம்ஜி!! மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்..
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன் என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராக முன்னேறி இருக்கிறார்.
தற்போது தமிழை தாண்டி தெலுங்கு ரசிகர்களை கவர இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடித்து வருகிறார். உக்ரைன் மாடல் நடிகையுடன் ஜோடி போட்டு நடித்து வரும் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் பிஸியாக் இருந்து வருகிறார். தற்போது படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
PRINCE என்ற பெயரை டைட்டிலை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது டிவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். அதில் வில்லனாக நடித்துள்ள பிரேம்ஜி அமரனின் போலி பேர் கொண்ட கணக்கினை டேக் செய்துள்ளார்.
இதனை அறிந்த பிரேம்ஜி சார் நீங்கள் தவறான என்னுடைய டிவிட்டர் கணக்கினை பதிவிட்டுள்ளீர்கள் என்று கருத்து கூறியிருந்தார். இதற்கு சிவகார்த்திகேயன், மன்னித்துவிடுங்கள். அடுத்தமுறை சரியாக செய்கிறேன் என்று கூறி மெசேஜ் செய்துள்ளார்.