வில்லனே மாமனார் தான்.. சூர்யா ஜோதிகாவுக்கு தாலிகட்டும் போது ஒதுங்கி இருந்த சிவக்குமார்
தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் சிவக்குமார். அவரது இரு மகன்களையும் சினிமாத்துறையில் அறிமுகப்படுத்தினார். அதில் மூத்த மகன் சூர்யா பல கஷ்டங்களுக்கு பிறகு முன்னணி நடிகராகவும் தேசிய விருது நடிகராகவும் திகழ்ந்து புகழை சேர்த்திருக்கிறார்.
நேருக்கு நேர் படத்திற்கு பிறகு சூர்யாவுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஜோதிகா.
சூர்யாவின் ஆரம்பக்கட்ட சினிமா வாழ்க்கையில் ஜோடி போட ஆரம்பித்த நடிகை ஜோதிகா பிரண்ட்ஸ் படத்தின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அப்போது இருவரின் காதல் விசயத்தில் சில சிக்கல்கள் உருவாகியது.
அதற்கு காரணம் சூர்யாவின் காதலை சிவக்குமார் எதிர்ப்பதாக செய்திகள் அப்போது கசிந்தது.
இதுகுறித்து சிவக்குமார் கடந்தாண்டு எடுக்கப்பட்ட சித்ரா லட்சுமணன் பேட்டியில் உண்மையை கூறியுள்ளார். ஜோதிகா - சூர்யா காதலை பெருந்தன்மையாக்கினது நீங்கள் தான் என்று நான் விமர்சிக்கிறேன் என்று சித்ரா லட்சுமணன் கேட்டுள்ளார்.
அதை நீ எப்படி வேணாலும் எடுத்துக்கோ. அந்த காலத்தில் இருந்தே 150 படத்தில் நான் காதல் படத்தில் நடித்திருக்கிறேன்.
அப்படி டயலாக்கெல்லாம் பேசிவிட்டு ஒரு பையன் ஒரே பொண்ணை காதலிப்பதற்கு அதுவும் 4 வருஷமா காத்திருக்கும் போது ஏன் வேண்டாம் சொல்லமுடியும்.
கல்யாணம் பண்ணா பண்ணிப்பேன் இல்லனா இப்படியே இருப்பேன் என்று இருவரும் கூறியதால் திருமணத்தினை செய்து வைத்தோம் என்று சிவக்குமார் கூறியுள்ளார்.