படிப்பு வரல, நடிப்பும் வராது! மேடையில் சூர்யாவை மோசமாக கலாய்த்த சிவகுமார்...
தமிழ் சினிமாவில் சமீபத்திய காலங்களில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் சூர்யா. ஆரம்பகாலத்தில் நடிப்பு நடனம் என எதுவும் வராமல் விமர்சனத்துக்குள்ளானவர் சூர்யா.
அதன்பின் அவர் வாழ்க்கையையே மாற்றிய படம் நேருக்கு நேர். இப்படத்திற்கு பின் பாலாவின் நந்தா மிகப்பெரிய சூப்பர் ஹிட் கொடுத்து சூர்யாவை ஒரு உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது ஜெய்பீம், சூரரை போற்று உள்ளிட்ட பட பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் சூர்யாவின் 2டி எண்டர்ரெண்ட்மெண்ட் தயாரிக்கும் ஓ மை காட் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சூர்யாவின் தாந்தை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
படத்தினை பற்றிய பேசிய பிறகு சூர்யாவின் பள்ளிப்பருவம் கல்லூரி நடிப்பு என அனைத்தையும் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். பள்ளிப்படிப்பில் சொதப்பிய சூர்யா ஒரு கட்டத்தில் கல்லூரியை கூட சரியாக முடிக்கவில்லை.
அதன்பின் அப்பா நடிகரா இருந்தால் நானும் நடிகராகனுமா என்று கூறி எக்ஸ்போர்ட் கார்மன்ஸ் கம்பெனியில் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சென்றாராம். ஆனால் அந்த வேலைக்கு செல்ல 6 ஆயிரம் மாத செலவு செய்து காரில் சென்றான்.
அப்படி இருக்கும் சமயத்தில் தான் வசந்த் சூர்யாவை கண்டுபிடித்து நேருக்கு நேர்-ல் நடிக்க வைக்க கேட்டார். ஆனால் சூர்யா அப்படத்தில் நடிக்க ஆரம்பித்து தொடர் 3 பிளாப் கொடுத்தான். அதன்பின் பாலாவின் நந்தா படம் தான் சினிமாவிற்கு கடிவாலம் போட்டது.