விபத்தில் சிக்கிய நடிகர் எஸ்.ஜே. சூர்யா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா
S J Surya
By Kathick
இயக்குநராக அறிமுகமாகி பின் நடிகராக என்ட்ரி கொடுத்தவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த இறைவி, ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர் பல ஆண்டுகள் கழித்து இயக்கி வரும் திரைப்படம்தான் கில்லர். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து ப்ரீத்தி அஸ்ராணி நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கில்லர் படத்தின் படப்பிடிப்பில் நடத்த விபத்தில் எஸ்.ஜே சூர்யா சிக்கி காயமடைந்துள்ளார். சண்டை காட்சி எடுத்தபோது இரும்பு கம்பியில் மோதி காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.ஜே. சூர்யா தற்போது ஓய்வில் இருக்கிறாராம். இரண்டு வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.
