விருந்து கொடுத்து ஸ்கெட்ச் போட்டு தூக்க போகும் நடிகர் சூர்யா! லிஸ்ட்டில் கமல் ஹாசனுமா?

Kamal Haasan Suriya Vikram Movie
By Edward May 29, 2022 06:44 AM GMT
Report

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத பாசில் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து ஜூன் 3ல் வெளியாகவுள்ள படம் விக்ரம். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் படம் வெளியாகவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் மல்டிவெர்சனில் இயக்கியுள்ளதாகவும் கைதி 2, விக்ரம் 2 என எடுக்கவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கேற்ப சூர்யா, விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கமல் ஹாசன் நடிப்பு மட்டும் இன்றி பன்முகத்திறமை பெற்று விலங்கி வருபவர்.

அப்படியிருக்கையில் தற்போது தயாரிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஒன்றின் மூலம் பல படங்களை தயாரித்துள்ள கமல் ஹாசன் ந்டிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தினை தயாரிக்கவுள்ளார்.

மேலும் நடிகர் விஜய்யுடன் ஜோடி சேர திட்டமிட்டு பேச்சு வார்த்தை நடத்தியும் இருக்கிறார் கமல்ஹாசன். ஆனால் விஜய் சில படங்கள் போட்டும் கண்டிப்பாக பண்ணுவோம் சார் அதை நானே சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

தற்போது நடிகர் சூர்யா கமல்ஹாசன் மற்றும் விக்ரம் படக்குழுவினருக்கு விருந்து வைக்க திட்டமிட்டு அழைத்திருக்கிறார். இதற்கு கமல்ஹாசனும் ஓகே என்று விருந்துக்கு சூர்யா வீட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணமே சூர்யாவை வைத்து படம் ஒன்றினை தயாரிக்க பேச்சு வார்த்தையை முடிக்கத்தானாம். இந்த விருந்து சூர்யா போட்ட வலையா? இல்லை கமல் போட்ட வலையா என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.