சிக்ரெட்லாம் பிடிக்க கூடாது!! விஜய் அண்ணாவுக்கு அட்வைஸ் செய்த சிறுவனின் வீடியோ..

Vijay Anirudh Ravichander Viral Video Lokesh Kanagaraj Leo
By Edward Jun 23, 2023 08:54 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராகவும் 100 கோடி சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

அவரது பிறந்தநாளனன்று 22 ஆம் தேதி லியோ படத்தின் சிங்கிள் பாடலான நான் ரெடி பாடல் வெளியாகி மிகப்பெரிய ஆதர்வை பெற்றது. இதற்கு அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் ரியாக்ஷனை பதிவி செய்தும் வந்தனர்.

பாடல் வைரலாகினாலும் சிலர் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. வாயில் சிக்ரெட் மற்றும் பாடல் வரியில் புகையிலை, வெட்டிக்கோனிப்பையில் என பல மோசமான வரிகள் இருந்துள்ளது. விஜய் அந்த வரிகளை பாடவில்லை என்றாலும் அவரை சிலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் சிறுவன் ஒருவன் லியோ படத்தின் போஸ்டரை பார்த்து, பின்னால் சிங்கம், நெருப்பு, முன்னால் விஜய், வாயில் சிகரெட், துப்பாக்கியில் இருந்து புகை என பேசியுள்ளார்.

மேலும், சிகரெட்லாம் பிடிக்க கூடாது, தப்பு, வாயில பெரிசா வந்து ரத்தம் வரும். சாப்பிடமுடியாது என்று கூறியபடி ஒரு வீடியோவில் பேசியிருக்கிறான். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.