2024ன் சிறந்த கிரிக்கெட்டர்!! கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் புகைப்படங்கள்..
ஸ்மிருதி மந்தனா
இந்திய பெண் கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடி வருபவர் தான் ஸ்மிருதி மந்தனா. பல சாதனைகளை படைத்து வரும் ஸ்மிருதி மந்தனா பற்றிய பல விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
97 ஐபிஎல் ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய ஸ்மிருதி, 4209 ரன்களும், 148 டி20யில் 3761 ரன்களும், 7 டெஸ்ட் போட்டிகளில் 629 ரன்களும் எடுத்துள்ளார்.
மேலும் தற்போது அயர்லாந்து அணிக்கு எதிராக நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 70 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார் ஸ்மிருதி.
சிறந்த வீராங்கனை
இந்நிலையில், 2023 - 24 ஆண்டுக்கான சிறந்த வீராங்கனைக்கான விருது இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் BCCI வழங்கும் நமன் விருதினை பெற்றுள்ளார். இது ஸ்மிருதி மந்தனாவின் சிறந்த வீராங்கனைக்கான 4வது விருதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஸ்மிருதி மந்தனாவை பார்த்து ரசிகர்கள் வியந்து பார்த்து வருகிறார்கள்.
Happy to receive the Best International Cricketer award at the #NAMANAwards. Thank you to BCCI for this honour😇 pic.twitter.com/y5PSRboLN4
— Smriti Mandhana (@mandhana_smriti) February 2, 2025