திருமணம் ரத்தாகிவிட்டது..இதோடு முடித்துக்கொள்கிறேன்!! ஸ்மிருதி மந்தனா விளக்கம்..
ஸ்மிருதி மந்தனா
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற ஓடியை உலககோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

இதை இந்தியா முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். உலககோப்பையை வென்ற கையோடு தன்னுடைய காதலர் பலஷ் முச்சல் என்பவரை ஸ்மிருதி மந்தனா மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயம் செய்தார்.
இவர்களின் திருமணம் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி நடக்கவிருந்தது. அதற்கான சடங்குகள் நடைபெற்ற நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணம் நடக்காமல் போனது. இதனையடுத்து பலஷ் முச்சலும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே ஸ்மிருதி மந்தனா வெளியில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார். இதனையடுத்து பலஷ் முச்சல் மீது பெண்ணுடன் தொடர்பில் இருந்தார் என்று செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தற்போது மெளனத்தை கலைத்து, ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

திருமணம் ரத்தாகிவிட்டது
அதில், கடந்த சில வாரங்களாக என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வருகிறது. என் தனிப்பட்ட விஷயங்கலை பகிர்ந்து கொள்ள விரும்புபவள் நானில்லை. இதையும் அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஆனால் திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதை மட்டும் தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.
இந்த விஷயத்தை இதோடு முடித்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்களும் அதையே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ஸ்மிருதி மந்தனா விளக்கமளித்து அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதேபோல் பலஷ் முச்சலும் சோசியல் மீடியாவில் திருமணம் நிறுத்தப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
