விபத்தில் சிக்கி படுத்த படுக்கையில் இருந்தேன்..ஆனா!! நடிகை சினேகா எமோஷனல்..

Sneha Tamil Actress Actress
By Edward Feb 26, 2026 12:00 PM GMT
Report

நடிகை சினேகா

90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாகவும் புன்னகை அரசியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோயினாகவும் திகழ்ந்து வந்தவர் தான் நடிகை சினேகா. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயானப்பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார். அதன்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்த சினேகா, விருதுவிழா ஒன்றில் தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து பேசியிருக்கிறார்.

விபத்தில் சிக்கி படுத்த படுக்கையில் இருந்தேன்..ஆனா!! நடிகை சினேகா எமோஷனல்.. | Sneha Emotional Speech At Award Function

இயக்குநர் கரு பழனிப்பன் கொடுத்த விருதை வாங்கியப்பின் பேசிய சினேகா, இவ்விருதை அவரிடம் இருந்து வாங்குவது மகிழ்ச்சி. ஏனென்றால் நான் சினிமாவிற்கு வந்த புதிதில் 3 வருடத்திலேயே ஒரு பெரிய விபத்தில் சிக்கினேன். அந்த விபத்தில் கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் அடிபட்டுவிட்டது. நான் எழுந்து நடக்கவே 8 மாதத்திற்கு மேலாகும் என்று சொன்னார்கள். ஆனால் அந்நேரத்தில் நான் மருத்துவமனையில் இருந்தேன்.

அப்போது என்னிடம் பார்த்திபன் கனவு திரைப்படத்தின் கதையை சொல்ல வந்தார். அப்போது நான், சார் நான் எழுந்து நடக்கவே முடியாத நிலையில் இருக்கிறேன், எந்த நம்பிக்கையில் என்னிடம் கதை கூறுகிறீர்கள் என்றேன். அவர் உடனே அதெல்லாம் இன்னும் ஒரு மாசத்தில் நடந்து விடுவீர்கள் என்றார்.

விபத்தில் சிக்கி படுத்த படுக்கையில் இருந்தேன்..ஆனா!! நடிகை சினேகா எமோஷனல்.. | Sneha Emotional Speech At Award Function

அவர் கொடுத்த நம்பிக்கையால் சரியாக ஒன்றரை மாதத்தில் நான் பார்த்திபன் கனவு படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்றேன். அதற்கு காரணம் இவர்தான், இவர் தான் எனக்கு கொடுத்த தைரியம், என்னை அன்று எழுந்து நடக்கவைத்தது.

ஆனால் அப்படத்திற்கு எனக்கு விருது கிடைக்கவில்லை. அப்படத்தில் நடித்த அனைவருக்கும் விருது கிடைத்தது. நமக்கு விருது கிடைக்கவில்லையே, அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டேன். அப்படத்திற்கு மட்டுமில்லை ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பட்டாசு போன்ற படங்களுக்கும் எனக்கு விருது கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.