விஜய்யுடன் இன்னும் ஒரே ஒரு நாள் தான்!! நடிகை சினேகாவால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தளபதி ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் புன்னகை அரசியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா. முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி குழந்தை மற்றும் குடும்பத்தை பார்த்து வந்தார்.
அதன்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள சினேகா, தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக 20 ஆண்டுகள் கழித்து நடித்து வரும் சினேகா, கோட் படத்தின் அப்டேட் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சமீபத்தில், ஆரம்பித்துள்ள ஹோட்டல் ஒன்றின் திருப்பு விழாவில் கலந்து கொண்டு பேட்டியளித்துள்ளார். அப்போது கோட் படத்தின் அப்டேட் பற்றி தொகுப்பாளர் கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு சினேகா, நன்றாக போய்ட்டு இருக்கு, எனக்கு இன்னும் ஒரு நாள் ஷூட் இருக்கு. தளபதியுடன் நான் இருக்கேன், எல்லா சீன்லயும் இருக்கேன் என்றும் படம் பார்த்துட்டு எப்படி இருக்கும் என்று நீங்களே கூறுங்கள் என்று சினேகா கூறியிருக்கிறார்.