மனைவியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நாக்கை கடித்து பிரசன்னா செய்த விஷயம்!

Prasanna Sneha Actress
By Bhavya Dec 11, 2025 05:30 AM GMT
Report

சினேகா

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என மக்களால் கொண்டாடப்படும் இவர் அவருடைய சிரிப்பால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்று உள்ளார்.

நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

குழந்தை பிறந்த பின் சினிமா பக்கம் வராமல் இருந்த சினேகா 2 குழந்தைகளும் கொஞ்சம் வளர்ந்த பின் படங்கள் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, தொழிலை கவனிப்பது, போட்டோ ஷுட் நடத்துவது என செம பிஸியாக உள்ளார்.

இவர் Snehalayaa என்ற புடவை கடை நடத்தி வருகிறார். சமீபத்தில் கோயம்புத்தூரில் தனது 2வது புடவை கடையை திறந்துள்ளார்.

மனைவியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நாக்கை கடித்து பிரசன்னா செய்த விஷயம்! | Sneha Husband Reaction For A Question

செய்த விஷயம்! 

இந்நிலையில் சினேகாலயா தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்த ஜோடியிடம் செய்தியாளர்கள் நீங்கள் எப்போதுமே ராணியாக இருக்கிறீர்கள்.

வயது என்பது வெறும் எண்தானா' என்று கேள்வி கேட்டனர். அதற்கு அருகில் இருந்த பிரசன்னா, சிரித்தபடியே, ஏய் என்று சொல்லி நாக்கை கடித்து கொன்றுவிடுவேன் என்பது மாதிரி செய்கை காண்பித்தார்.

அதற்கு சினேகா 'மனதால் சந்தோஷமாக இருந்தால்தான் முகத்தில் தெரியும். அதற்காக பிரசன்னாவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.