நடிகை சினேகாவா இது!! 41 வயதில் இப்படியொரு லுக்கில் வெளியான போட்டோஷூட்
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் கனவுக்கன்னியாகவும் புன்னகை அரசியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா. கடந்த 2009ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012ல் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தார் சினேகா.
திருமணத்திற்கு பின் கதாநாயகியாக நடிப்பதை நிறுத்திவிட்டு துணை கதாபாத்திரங்களில் நடித்தும் நிகழ்ச்சி நடுவராகவும் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன் சினேகா பிரசன்னாவை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யவுள்ளார் என்ற வதந்தி செய்திகள் பரவியது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நெருக்கமான போட்டோஷூட் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தனர். தற்போது 41 வயதை எட்டிய நடிகை சினேகா, போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
தற்போது பிங்க் நிற ஆடையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான போஸ் கொடுத்து மிரட்டியிருக்கும் போட்டோஷூட்டை பகிர்ந்திருக்கிறார்.