நம்பவே முடியவில்லை, 10 ஆண்டுகள் கடந்துவிட்டது.. புன்னகை அரசி எமோஷ்னல்
சினேகா
புன்னகை அரசியாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை சினேகா. நாயகியாக நடித்து வந்தவர் திருமணம், குழந்தைகள் என பிஸியாக வலம் வந்தார்.
தற்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.
எமோஷ்னல்
இந்நிலையில், நடிகை சினேகா தனது மகன் விஹானின் பத்தாவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், தன் மகன் குறித்து வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், " இன்று உனது பத்தாவது பிறந்தநாள். லட்டு' நீ உன் வாழ்வின் முக்கிய மைல்கல்லை எட்டியிருக்க. பத்து ஆண்டுகள் கடந்துவிட்டதை நம்பவே முடியவில்லை.
நேற்று தான் உன் சின்ன கைகளை பிடித்தது போன்று இருந்தது ஆனால், தற்போது நீ ஒரு அன்பான, சிறந்த மகனாக வளர்ந்து உள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
லட்டு சிந்தனை, வீரம், நகைச்சுவை மற்றும் வாழ்க்கையின் மீதுள்ள ஆர்வம் என அனைத்திலும் சிறந்து விளங்கி வருகிறான்" என்று தெரிவித்துள்ளார்.