நடிகை சினேகாவின் தரமான ரீஎண்ட்ரி!! கோட் படத்தில் வாங்கிய சம்பளம் இவ்வளவா..

Vijay Sneha Venkat Prabhu Tamil Actress Greatest of All Time
By Edward Sep 05, 2024 12:15 PM GMT
Edward

Edward

Report

சினேகாவின் ரீஎண்ட்ரி

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தவர் நடிகை சினேகா.

நடிகை சினேகாவின் தரமான ரீஎண்ட்ரி!! கோட் படத்தில் வாங்கிய சம்பளம் இவ்வளவா.. | Sneha Reentry Goat Salary Viral Ags Vijay Venkat

முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தார். பின் இரு குழந்தைகளுக்கு தயாகி குடும்பத்தை பார்த்து வந்த சினேகா, சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

குணச்சித்திர ரோலில் நடித்து வந்த சினேகா பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யின் கோட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

கோட் சம்பளம்

கோட் படம் இன்று உலகளவில் தியேட்டரில் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஹீரோயினாக இப்படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்த சினேகா, கோட் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் கோட் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் 80 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.