இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மனைவி.. சினேகன் செய்யும் வேலையை பாருங்க

Bigg Boss Trending Videos Snehan
By Bhavya Feb 23, 2025 08:30 AM GMT
Report

சினேகன் - கன்னிகா

தமிழ் சினிமாவில் சிறந்த பாடல்களை எழுதி மக்களால் கொண்டாடப்படும் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன்.

புத்தம் புது பூவே என்ற பாடல் எழுதி அதன் மூலம் பாடலாசிரியராக சினிமாவில் அறிமுகமான இவர் பின் பாண்டவர் பூமியில் அவரவர் வாழ்க்கையில், தோழா தோழா ஆகிய பாடல்களை எழுத செம ஹிட்டடித்தது.

மௌனம் பேசியதே படத்தில் ஆடாத ஆட்டமெல்லாம், சாமி படத்தில் கல்யாணம் தான் கட்டிகிட்டு, ஆட்டோகிராப் படத்தில் ஞாபகம் வருதே, ராம் படத்தில் ஆராரிராரோ, ஆடுகளம் படத்தில் யாத்தே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மனைவி.. சினேகன் செய்யும் வேலையை பாருங்க | Snehan Gifted Phone To His Wife

அதன் பின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். பிக்பாஸ் முடித்த கையோடு அரசியல், சீரியல் என பிஸியாக இருக்கிறார்.

சினேகன் தனது நீண்ட நாள் காதலி கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அண்மையில் இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.

இந்நிலையில் சினேகன் தனது மனைவி கன்னிகாவிற்கு ஐபோன் பரிசளித்துள்ளார். தற்போது, இதன் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ,