ராசியில்லா நடிகையாக மாறும் கீர்த்தி? மண்ணை கவ்வியதா சர்க்கார் வாரி பட்டா.?

Keerthy Suresh Mahesh Babu
By Edward May 12, 2022 12:25 PM GMT
Report

குழந்தை நட்சத்திரமாக கீதாஞ்சலி என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் கீர்த்தி சுரேஷ். இப்படத்திற்கு பிறகு இது என்ன மாயம் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார்.

இதன்பின் ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். தமிழ், மலையாளம், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையானார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜின்காந்தின் அண்ணாத்த படத்தில் தங்கையாகவும் சிரஞ்சீவி நடிப்பில் வேதாளம் படத்தின் ரீமேக்கில் உருவாகும் போலோ சங்கர் படத்தில் அவருக்கு தங்கையாகவும் நடித்து வருகிறார்.

அவர் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா, ராங் தே, அண்ணாத்த, மரக்கார், குட்லக் போன்ற படங்கள் தோல்வியை சந்தித்து எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வந்தது. இப்படத்திற்கு பிறகு சாணி காகிதம் என்ற ஓடிடி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதனைதொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் சர்காரு வாரி பாட்டா-வில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வருகிறது.

அதிலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பலர் கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்ததை ரசிகர்கள் கிண்டல் செய்யும் விதமாக ராசி இல்லாத நடிகை என்று கூறு வருகிறார்கள். ஆனால் மகேஷ் பாபு தான் இப்படத்தினை தூக்கி நிறுத்துவதாகவும் விமர்சனத்தில் கூறி வருகிறார்கள்.