நாகசைதன்யா நடிப்பில் பிடித்த, பிடிக்காத படங்கள்.. இந்த படமா?மனைவியின் ஷாக்கிங் பதில்

Samantha Naga Chaitanya Sobhita Dhulipala
By Bhavya Feb 10, 2025 05:30 AM GMT
Report

நாகசைதன்யா

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார். இவர் நடிப்பில் தண்டேல் திரைப்படம் சில தினங்களுக்கு முன் வெளியானது.

சந்தூ மொண்டேட்டி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நாகசைதன்யா ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து பின், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று நடிகை சோபிதாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். அதன் பின், தொடர்ந்து பல சர்ச்சைகள் இந்த ஜோடி குறித்து எழுந்த வண்ணம் இருந்தது.

நாகசைதன்யா நடிப்பில் பிடித்த, பிடிக்காத படங்கள்.. இந்த படமா?மனைவியின் ஷாக்கிங் பதில் | Sobhita About Her Husband Movies

ஆனால், அது எதையும் கண்டு கொள்ளாமல் நாகசைதன்யா தனது காதல் மனைவி குறித்து பல நல்ல விஷயங்களை பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார். அது போன்று நடிகை சோபிதாவும் தன் கணவர் நடித்து அவருக்கு பிடித்த மற்றும் பிடிக்காத படங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

ஷாக்கிங் பதில் 

அதில், "நாகசைதன்யா நடிப்பில் வெளிவந்த பெஜவாடா படம் எனக்கு பிடிக்காது. நாகசைதன்யா ஏன் அது போன்ற படங்களை தேர்வு செய்தார் என்று நான் அவரிடமே பலமுறை கேட்டுள்ளேன்.

நாகசைதன்யா காதல் நாயகனாக நடித்த படங்கள் தான் எனக்கு பிடிக்கும். குறிப்பாக அவர் நடித்த ஏ மாய சேசாவே படம் மிகவும் பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நாகசைதன்யா சமந்தாவுடன் நடித்துள்ள நிலையில், சோபிதாவின் இந்த பதிலால் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

நாகசைதன்யா நடிப்பில் பிடித்த, பிடிக்காத படங்கள்.. இந்த படமா?மனைவியின் ஷாக்கிங் பதில் | Sobhita About Her Husband Movies