சோம் தொடர்ந்து வெளியேறப்போகும் போட்டியாளர்கள் இவர்கள்தான்? இத்தனை கோடி வித்யாசமா! பாதிகூட இல்லையே!
பிக்பாஸ் 4 சீசன் இறுதி போட்டிக்கு 18 போட்டியாளர்களில் 5 போட்டியாளர்கள் சென்றனர். 106வது நாளன்று வெற்றியாளர் யார் என்று தெரியவர இருக்கும் நிலையில் இன்று அதற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் இறுதி போட்டி ஆரம்பித்து அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
அதில் முதலாவதாக பிக்பாஸ் 3 சீசனின் வெற்றியாளர் முகேன் வீட்டிற்குள் வந்து டாஸ்க்குளை கொடுத்து இறுதி போட்டியை உற்சாகப்படுத்தினார். அவரின் கொடுத்த அதாவது 5 போட்டியாளர்களில் யார் ஐந்தாம் இடத்தினை பிடிப்பார் என்ற இக்கட்டான இடத்தினை முகேன் முன்னின்று வழி நடத்தியதில் சோம் பிடித்து வெளியேறினார்.
சுமார் 3.3 கோடி வாக்குகளோடு வெளியேறி நிகழ்ச்சியை சக பிக்பாஸ் 4 பிரபலங்களுடன் பார்த்து கொண்டு வருகிறார். அவரை தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் 3.7 கோடி வாக்குகள் பெற்று 4ஆம் இடத்தினை பெற்று வெளியேறியும், அவரை தொடர்ந்து ரியோ 4+ அதற்கு சமமான வாக்குகளுடனும் 3 ஆம் இடத்தினை பெற்றுள்ளாராம்.
மேலும் யார் வின்னர் ரன்னர் என்ற வாக்குகளில் பாலாஜி வெறும் 6+ வாக்குகளையே பெற்று இரண்டாம் இடம்பிடித்து பிக்பாஸ் 4ன் ரன்னராக வந்துள்ளார். அவரை தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக ஆரி சுமார் 16 கோடி வாக்குகள் பெற்று பிக்பாஸ் டைட்டிலை தட்டிச்சென்றுள்ளார் என்று தகவல் வந்துள்ளது.