விஜய் படத்துல எனக்கு நடந்த அவமானம்..அழுதுட்டேன்!! நடிகை சோனா ஓபன் டாக்..

Vijay Gossip Today Tamil Actress Actress
By Jai May 23, 2026 05:00 PM GMT
Report

நடிகை சோனா

நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கையை மையப்படுத்தி ஸ்மோக் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இரு சிசன்களாக உருவாகியுள்ள இந்த தொடரில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் 99 சதவீத உண்மையை மட்டுமே பதிவு செய்ததாக சோனா தெரிவித்தார்.

விஜய் படத்துல எனக்கு நடந்த அவமானம்..அழுதுட்டேன்!! நடிகை சோனா ஓபன் டாக்.. | Sona Recalls Crying On Vijay S Shahjahan Sets

வெப் தொடரின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் சோனா, விஜய்யின் ஷாஜகான் படத்தில் நடித்தபோது நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

எனக்கு நடந்த அவமானம்

அதில், ஷாஜகான் படம் எனக்கு 2வது படம். அப்படத்தில் முதலில் என்னிடம் சொல்லப்பட்ட ரோலே வேற, நீங்கள் தான் 2வது லீடு ரோல், படம் முழுக்க வருவீங்க என்றெல்லாம் சொன்னாங்க. ஆனால் ஷூட்டிங்கில் எடுத்ததே வேற, ஒருமுறை அப்படத்தின் ஹீரோயினோடு நான் அழகாக இருந்துவிட்டேன்.

விஜய் படத்துல எனக்கு நடந்த அவமானம்..அழுதுட்டேன்!! நடிகை சோனா ஓபன் டாக்.. | Sona Recalls Crying On Vijay S Shahjahan Sets

உடனே இயக்குநர் உள்ளிட்டோர் என்னை அழைத்து, ஹீரோயினைவிட நீ அழகாக இருந்தால் எப்படிம்மா? என்று கேட்டுவிட்டு தலையை எல்லாம் கலைத்துவிட்டார்கள்.

அதை பார்த்து நான் அங்கேயே அழுதுவிட்டேன். நான் இயக்குநராகவோ, தயாரிப்பாளராகவோ இருந்திருந்தால் கூட ஹீரோயினைவிடவும் ஒரு பெண் அழகாக இருந்தால் அப்படித்தான் செய்வேன். ஆனாலும் அது எனக்கு இரண்டாவது படம், வயது 19 தான் இருக்கும், அதனால்தான் அப்படி அழுதேன் என்று சோனா தெரிவித்துள்ளார்.