அந்த இடத்தில் கை வைத்து அத்துமீறினார்!! தனுஷ் பட நடிகை சோனம் கபூர் ஓப்பன்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சோனம் கபூர். 2007ல் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சாவரியா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நடித்து வந்த சோனம் கபூர், தனுஷுடன் ராஞ்சனா படத்தில் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களையும் ஈர்த்தார்.
2018ல் ஆனந்த் அகுஜா என்பவரை திருமணம் செய்து குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சோனம், பிளைண்ட் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்த தகவலை 2016ல் நடந்த தி ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார் சோனம் கபூர். 13 வயது இருக்கும் போது மும்பையில் இருக்கும் பிரபல தியேட்டரில் தன் நண்பர்களுடன் படம் பார்க்க சென்றுள்ளார்.
அப்போது இடைவேளை சமயத்தில் ஸ்னேக்ஸ் வாங்க வெளியே வந்த போது அந்த கூட்ட நெரிசலில் அதிகமானோர் இருப்பதை கவனித்த சக்கிர புத்தி கொண்ட மனிதர் ஒருவர் 13 வயது சிறுமி என்றும் பாராமல் என்னுடைய மார்பகங்களை பிடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
இதனால் கை - கால்கள் நடுக்கம் ஏற்பட்டு அங்கேயே அதனால் அழ துவங்கினேன். இதனை யாரிடமும் கூறாமல் தனக்குதானே தவறு செய்தது போல் மனநிலைக்கு ஆளாக்கப்பட்டதாக சோனம் கபூர் தெரிவித்துள்ளார். இதுபோல் பலர் குழந்தை பருவத்தில் இதுபோன்ற சம்பவத்தால் குற்ற உணர்வுகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்றும் சோனம் தெரிவித்துள்ளார்.