தம்பியை மிஞ்சிய அண்ணன்! செல்வராகவன் - சோனியா விவாகரத்து இந்த நடிகை தான் காரணம்?
தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை சோனியா அகர்வால். இதையடுத்து, கோவில், தம், சக்ஸஸ், மதுர போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின் 7ஆம் அறிவு, திருட்டு பயலே, புதுப்பேட்டை,வானம் போன்ற படங்களில் நடித்தார். தன்னை சினிமாவில் மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்ற இயக்குனர் செல்வராகவனை 2006ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். ஒரே வருடத்தில் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார். ஆனால் சோனியா அகர்வால் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சோனியா அகர்வால் - செல்வராகவன் விவாகரத்துக்கு ஒரு முன்னணி நடிகை தான் காரணம் என்று கூறப்படுகிறது.
புதுப்பேட்டை படத்தின் போது அந்த நடிகையுடன் நெருக்கமாக இருந்த செல்வராகவன் சோனியா அகர்வாலை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்னும் அந்த நடிகையுடன் இருந்த உறவினை நீடித்து வந்தாராம். இது சோனியா அகர்வால் காதுக்கு செல்ல இதெல்லாம் செட்டாகாது என்று சோனியா அகர்வால் விவாகரத்து கேடு பிரிந்துவிட்டாராம்.
கடைசியில் லிவ்விங் டு கெதரில் இருந்த அந்த நடிகையும் விட்டு சென்றுவிட்டாராம். பின் அடுத்த ஆண்டே கீதாஞ்சலியை திருமணம் செய்து இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் செல்வராகவன். சோனியா அகர்வாலும் படங்களில் கமிட்டாகி தற்போது ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார்.