நகைச்சுவை நாயகனாக இருந்து கதாநாயகனாக மாறிய சூரியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா
Soori
By Karthick Raja
நகைச்சுவை நாயகனாக பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த சூரி இன்று கதாநாயகனாக மாறியுள்ளார்.
இவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை மற்றும் கருடன் இரு திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ள நடிகர் சூரியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் சூரியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
மேலும் சூரிக்கு மதுரையில் சொந்தமான ஹோட்டல் ஒன்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.