போயஸ் கார்டனில் ஆண்களின் ஆதிக்கம் தான்!! ரஜினி மகள் செளந்தர்யா ஓபன் டாக்..
ரஜினி மகள் செளந்தர்யா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா, அன்பே ஆருயிரே, சந்திரமுகி போன்ற படங்களுக்கு டைட்டில் டிசைன் செய்திருக்கிறார். அதன்பின் கோவா படத்தி தயாரித்தார். பின் மோசன் கேப்சர் தொழில்நுட்பத்துடன் கோச்சடையான் படத்தை இயக்கி தோல்வியை சந்தித்தார்.

பின் விஐபி 2 படத்தை இயக்கியும் தோல்வியை சந்தித்தார். இதனையடுத்து பல ஆண்டுகள் சினிமா பக்கம் வராத செளந்தர்யா, வித் லவ் படத்தை தயாரித்து மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளார்.
ஆண்களின் ஆதிக்கம்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், யாத்ரா, லிங்கா, வேத், வீர் ஆகிய 4 பேருமே எனக்கு பாப்பாதான். நானும் அக்காவும் வளர்ந்தபோது பெண்களின் ஆதிக்கம் போயஸ் கார்டனில் இருந்தது. இப்போது நான்கு பேருமே ஆண்கள் தான், அவர்களது ஆதிக்கம் தான் இருக்கிறது.
நான்கு பேருமே வெவ்வேறு வயதில் இருக்கிறார்கள். எனவே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவர்களுடன் உரையாடுவது மகிழ்ச்சியாகவே இருக்கிறது என்று செளந்தர்யா தெரிவித்துள்ளார்.