ரஜினி மகள் கழுத்தில் தாலிகட்ட மாட்டேன்னு அடம் பிடித்த கணவர்!! செளந்தர்யா சொன்ன ரகசிய காரணம்..

Rajinikanth Aishwarya Rajinikanth Marriage Soundarya Rajinikanth With Love
By Edward Feb 13, 2026 05:45 AM GMT
Report

செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவரும் தமிழ் சினிமாவில் இயக்குநர்களாக அறிமுகமாகினார்கள். இதில் இளைய மகள் செளந்தர்யா இன்றும் படங்களை இயக்கி வருகிறார். முதல் திருமணம் விவாகரத்தில் முடிய, அதன்பின் இரண்டாம் திருமணத்தை செய்து குழந்தையை பெற்றெடுத்தார் செளந்தர்யா.

ரஜினி மகள் கழுத்தில் தாலிகட்ட மாட்டேன்னு அடம் பிடித்த கணவர்!! செளந்தர்யா சொன்ன ரகசிய காரணம்.. | Soundarya Vishagan Delayed Knot During Wedding

இந்நிலையில் தங்கள் திருமணத்தின்போது நடந்த ஒரு சம்பவத்தை பற்றி செளந்தர்யா பகிர்ந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதில், எங்கள் திருமணத்தின் முகூர்த்த நேரம் வந்துவிட்டது.

ஆனால் மண்டபத்தில், எனது மகன் வேத் கிருஷ்ணா இல்லை. உடனே நான் என் அக்காவிடம் வேத் இன்னும் வரவில்லையா என்று கேட்டேன். அப்போது விசாகன் என்னை பார்த்து, வேத் வரும் வரை நான் தாலி கட்டமாட்டேன் என்று சொன்னார். பின் வேத் வந்தப்பின் அவர் என் கழுத்தில் தாலிக்கட்டினார்.

ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எல்லோரும் ஒன்றுதான். குழந்தைகளுக்கு எல்லாம் புரியும். அவர்களிடம் போய் சொல்லவோ, பொய்யாக நடக்கவோ முடியாது. அவர்கள் அதனை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். விசாகன் தன்னை பார்த்துக்கொள்வார் என்று வேத் உணர்ந்தான்.

அவனுக்கு அந்த உணர்வு கிடைத்தது. வேத் வந்தப்பின் விசாகன் என் கழுத்தில் தாலிக்கட்டியதை நான் எப்போதுமே மறக்கமாட்டேன் என்று எமோஷனலோடு தெரிவித்துள்ளார் செளந்தர்யா. சமீபத்தில் அவர் தயாரித்த வித் லவ் படம் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.