சர்ச்சையாகும் கெளரி கிஷன் பிரஸ்மீட் விவகாரம்!! கண்டித்த தென்னிந்திய நடிகர் சங்கம்..
கெளரி கிஷன்
இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் நடிப்பில் உருவாகி வெளியான படம் தான் அதர்ஸ். இன்று ரிலீஸாகியுள்ள இப்படத்தின் பிரஸ் மீட்டின் போது நடிகர் ஆதித்யாவிடம், பத்திரிக்கையாளர்.

நடிகை கெளரி கிஷனை தூக்கும் போது அவர் உடல் எடை என்ன என்பது தெரிந்ததா? என்ற கேள்வியை கேட்டுள்ளார். இதுகுறித்து அப்போது பெரியளவில் பேசப்படவில்லை என்பதால், கெளரி கிஷன் கொடுத்த பேட்டியில் அவர் அப்படி கேட்டது தப்புதான் என்று கூறினார்.
இதனையடுத்து, மீண்டும் நடந்த பிரஸ் மீட்டிங்கின் போது பத்திரிக்கையாளரை பார்த்து நீங்கள் தான் என் எடை என்ன என்று கேட்டது என கெளரி கேட்க, ஆமாம் நான் கேட்டதில் என்ன தவறு என்று பதிலளித்தார். என்ன தவறா? நீங்கள் என் எடையை கேட்டுள்ளீர்கள், உங்கள் எடை என்ன? கூறுங்களேன் என்று கேள்வி எழுப்ப அடுத்தடுத்த வாக்குவாதம் நடந்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம்
ஒருக்கட்டத்தில் நடிகை கெளரி கிஷன், என்னால் உங்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது, நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும், நீங்கள் கேட்டது தவறு என்று கோபத்தில் கொந்தளித்தார்.
இந்த விவகாரம் பெரியளவில் பேசுபொருளாக மாற, தென்னிந்திய நடிகர் சங்கம் பத்திரிக்கையாளரை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், திரைத்துறை, பத்திரிக்கை துறை
இரண்டையும் பிரிக்கமுடியாத சகோதரர்கள். நேற்று
நிகழ்ந்த இந்த நிகழ்வு இகவும் விரும்பத்தகாதது
என்று கூறினர். இதற்கு பல நடிகைகள் முதல்
பெண்கள் வரை கெளரி கிஷனுக்கு சப்போர்ட்
செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
