இந்த நடிகைக்கு இத்தனை கோடி தானா? முன்னணி ஹீரோயின்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

samantha trisha keerthysuresh nayantara kajalaggerwal
By Edward May 28, 2021 06:49 AM GMT
Report

பெரும்பாலும் ஒரு படத்தில் எவ்வளவு பெரிய நடிகர் என்றாலும் அவருக்கு இணையாக அப்படத்தில் பேசப்படுபவர்கள் நடிகைகள். ஹீரோக்களுக்கு இணையாக இல்லாவிட்டாலும் வசதிபார்க்கும் நிலைக்கேற்ப சம்பளம் வாங்குகிறார்கள்.

அப்படி படத்தின் வெற்றி என்றால் சம்பளத்தை ஏற்றியும், தோல்வி என்றால் அதே சம்பளத்தை வைக்கிறார்கள் என்றும் தயாரிப்பாளர்களின் ஆதங்கமாக இருக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளின் புதிய சம்பள விவரம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அவர் சுமார் ரூ. 4 கோடி முதல் 5 கோடி வரை ஒரு படத்திற்காக சம்பளம் நிர்ணயித்து வாங்கி வருகிறார்.

ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அனுஷ்கா ரூ. 3 கோடி வாங்கி வருகிறார். ஆனால் தற்போது எந்த படத்திலும் கமிட்டாகியுள்ளார் என்பது கேள்வியாகத்தான் இருக்கிறது.

நடிகை சமந்தா தற்போது முன்னணி நடிகையாக திருமணமாகியும் நடித்து வருகிறார். அவர் வாங்கும் சம்பளம் ஒரு படத்திற்கு ரூ. 3 கோடியே 50 லட்சம் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.

குறைந்த காலத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் லட்சத்தில் வாங்கிய சம்பளம் தற்போது முன்னணி நடிகர்களின் படத்திற்கேற்ப ரூ. 3 கோடி கேட்கிறாராம். தற்போது நடிகர் விஜய்யுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேரவிருக்கிறார் கீர்த்தி.

சமீபத்தில் திருமணமாகி நடித்து கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் ரூ. 2 கோடி சம்பளமாக வாங்குகிறார். சமீபத்தில் கணவர் கூறினால் சினிமாவில் இருந்து விலகுவேன் என்று கூறியுள்ளார். இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், ஆச்சாரியா உள்ளிட்ட தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தும் படப்பிடிப்பிற்காக காத்துகொண்டிருக்கிறார்.

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து தற்போது போதிய படவாய்ப்புகள் பெறாமல் இருந்து வரும் நடிகை திரிஷா, நடிகை ஸ்ருதிஹாசன், நடிகை தமன்னா ஆகியோர் சுமார் ரூ. 1 கோடியே 50 லட்சம் வரை சம்பளமாக கேட்டு வருகிறார்களாம்.

மேல்கூறிய நடிகைகள் பெரும்பாலும் கீர்த்தி சுரேஷை தவிர அனைவரும் 30 வயதை எட்டிய நடிகைகளாகவும் திருமணமான நடிகைகளாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.