சன் டிவி பற்றி சொன்னா உடம்பு கூசுது..பெண்களுக்கு நடக்கும் அந்த மாதிரி டார்ச்சர்!! செய்திவாசிப்பாளர் சொன்ன பகிர்
செய்திவாசிப்பாளர்,தொழில் முனைவர், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் சவுதாமணி.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சவுதாமணி தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் என்னுடைய கணவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக இறந்துவிட்டார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நான் வேலை செய்யும் இடத்திலேயே இரண்டாம் திருணம் செய்துக்கொள்ள அணுகினார்கள். ஆனால் எனக்கு இரண்டாம் திருமணத்தில் விருப்பம் இல்லை. என்னுடைய வாழ்க்கை குழந்தைகளாக மட்டும் தான் என்று முடிவு செய்தேன்.
என்னுடைய கணவர் மறைவுக்கு பின் நான் பணியாற்றும் இடத்தில், நீ என்ன கண்டுக்கவே மாட்டிக்கிற? என்று தலைமையாளர் ஜாடை மாடையாக பேசினார்.
அதுமட்டுமின்றி போனில் அழைத்து, உன்னுடைய குழந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன். உன் செலவு எல்லாம் நான் பார்த்துகிறேன் என்று பேசினார். எனக்கு மட்டும் இல்ல அங்கு இருக்கு பல பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலை கொடுத்திருக்கிறார்.
இப்போது சன் டிவி என்றாலே எனக்கு உடம்பெல்லாம் கூசும். அந்த அளவுக்கு அருவருப்பானவர்கள் அங்கு இருக்கிறார்களா? என்று சவுதாமணி தெரிவித்துள்ளார்.