திருமணத்திற்கு பின் பாடுவதையே நிருத்திய மறைந்த எஸ்பிபி-யின் மகள்!! எஸ்பி சரண் கூறிய உண்மை..

S P Balasubrahmanyam Super Singer Vijay Television S. P. Charan
By Jai Feb 09, 2023 12:30 PM GMT
Report

இந்திய சினிமாவில் பல மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் ஜொலித்தவர் எஸ்பி பாலசுப்ரமணியம். முன்னணி நடிகர்களின் படங்கள் முதல் சிறு பட்ஜெட் படங்கள் வரை தன் குரலால் அனைவரையும் கட்டுப்படுத்தி வந்த எஸ்பிபி அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார்.

திருமணத்திற்கு பின் பாடுவதையே நிருத்திய மறைந்த எஸ்பிபி-யின் மகள்!! எஸ்பி சரண் கூறிய உண்மை.. | Spb Daughter Pallavi Sing First After Marriage

பல விருதுகளை வாங்கி குவித்த எஸ்பிபி-க்கு பிறகு அவரது மகன் எஸ்பி சரண் பல கச்சேரிகளை தன் அப்பாவுக்காக செய்து வருகிறார்.

இந்நிலையில் அனைவரும் எஸ்பிபி அவர்களின் மகன் எஸ்பி சரணை தான் பாடகர் என்று அறிந்திருப்போம்.

ஆனால் எஸ்பிபி-யின் மகள் பல்லவியும் ஒரு பாடகர் தான் என்ற உண்மை வெளியாகியுள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு எஸ்பிபி அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.

திருமணத்திற்கு பின் பாடுவதையே நிருத்திய மறைந்த எஸ்பிபி-யின் மகள்!! எஸ்பி சரண் கூறிய உண்மை.. | Spb Daughter Pallavi Sing First After Marriage

அப்போது எங்கள் வீட்டில் இல்லாத ஒரு குரல் பல்லவிக்கு உண்டு, கல்யாணத்திற்கு பின் பாடுறதையே நிருத்திட்டா அது ஏன் என்று எங்களுக்கே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இது நாள் வரை பாடாத பல்லவி அப்பாவுக்காக நிகழ்ச்சியில் பாடி உருக வைத்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.