45 வருடமாக என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி! உருக்கமாக பதிவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..

Annaatthe rajinikanth spb d imman suruthaisiva
By Edward Oct 04, 2021 03:05 PM GMT
Report

தன் அருமையாக குரலால் இந்திய சினிமாவின் பல மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனைபடைத்ததோடு பல கோடி மக்களின் அன்பை பெற்றவர் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம். கடந்த 2020 செப்டம்பம் மாதம் கொரோனா வைரலாஸ் பாதிக்கப்பட்டு பின் உடல்நிலை மோசமானதால் உயிரிழந்தார்.

அவரின் இறப்பு இந்திய ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் பெரிய இழப்பை கொடுத்து அதிர்ச்சியை கொடுத்தது. சமீபத்தில் அவர் கடைசியாக பாடிய சில பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் ஒரு பாடலுக்கு பாடி அசத்தியுள்ளார்.

அப்படத்தின் பாடல் அக்டோபர் 4 மாலை 6 மணிக்கு வெளியாக பெரியளவில் பிரபலமாகி வருகிறது. எஸ்பிபி குரலில் அப்படத்தின் பாடல் இமான் இசையில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சூப்பர் ஸ்டார் அவரது டிவிட்டர் பக்கத்தில்,

'"45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.