ஸ்பைடர் மேனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. நடிகையுடன் 4 வருட டேட்டிங்கிற்கு பின் திருமணம்
ஹாலிவுட் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்கள் டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா. இவர்கள் இருவரும் பிரபலமாக காரணமாக இருந்த திரைப்படம் ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங்.
இப்படத்தில் ஸ்பைடர் மேனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் டாம் ஹாலண்ட். இப்படத்தின் படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், கடந்த 2021ல் இருந்து இருவரும் டேட்டிங் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், காதல் ஜோடிகளாக கிசுகிசுக்கப்பட்ட வந்த இருவரும் தற்போது திருமணத்திற்கு தயாராகியுள்ளனர். ஆம், டாம் ஹாலண்ட் - ஜெண்டயா ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
சமீபத்தில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவிற்கு நடிகை ஜெண்டயா வைர மோதிரத்தை கையில் அணிந்து வந்திருந்தார். இதன்மூலம் இருவருடைய நிச்சயதார்த்தம் குறித்து வந்த தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.