24 வயதை எட்டிய ஸ்ரீலீலா!! மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?
ஸ்ரீலீலா
தென்னிந்திய சினிமாவில் இளம் சென்சேஷனல் நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஸ்ரீலீலா. இவர் நடிப்பை தாண்டி நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நடிகை ஸ்ரீலீலா பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவை காதலித்து வருவதாக தகவல் ஒன்று இணையத்தில் கடந்த சில நாட்களாக உலா வந்தது.

இதற்கு ஸ்ரீலீலாவின் தாயாரா, இந்த வதந்திகள் முற்றிலும் பொய்யானவை, உண்மை இல்லை. இப்படிப்பட்ட கதைகள் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. இது முற்றிலும் கற்பனையான தகவல் தான் என்று கூறினார்.
24வது பிறந்தநாள்
இதனையடுத்து படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை ஸ்ரீலீலாவுக்கு ஜூன் 14 ஆம்தேதி இன்றுடன் 24வது பிறந்தநாள் ஆரம்பித்துள்ளது. ஸ்ரீலீலா குறித்த பல விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரமும் வெளியாகியுள்ளது.

டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஸ்ரீலீலா, ஒரு படத்திற்காக ரூ. 2.5 கோடி முதல் 4 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். புஷ்பா 2 படத்தில் கிஸ்க் பாடலுக்கு ஆட்டம் போட மட்டுமே ரூ. 4 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
அந்தவகையில் இதுவரை
அவரது சொத்து ரூ. 20 கோடி என்று
மதிப்பிடப்பட்டுள்ளதாம். Range Rover LWB ரு. 3
கோடி. BMW X3 ரூ. 65 லட்சம், Honda City ரூ.
16 லட்சம், Maruti S-Presso ரூ. 5 லட்சம் என
கார் கலெக்ஷனை வைத்துள்ளார் ஸ்ரீலீலா.